Header Ads

Header ADS

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பவில்லை _ பள்ளிக்கல்வி ஆணையர்! விகடன் Exclusive



பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி

வெளியானதைத் தொடர்ந்து அது சர்ச்சையாகியிருக்கிறது.

 

 

தடுப்பூசி கட்டாயம் என்று அரசு நிர்பந்திக்க முடியுமா? விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்பதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்?” என்று ஆசிரியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

 

இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர், ``அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஒரே வழி

என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அனைவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் அது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்காது.

 


ஆனால், அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், போடாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதுதான் பதற்றத்தை உருவாக்குகிறது. ஏனெனில், சாதாரண காய்ச்சலுக்காகப் போட்டுக்கொள்ளும் ஊசிக்கே ஒவ்வாமை

பிரச்னை உள்ள ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியானவர்கள், `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமோ?' என அச்சமடைகின்றனர்.

 


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் கேட்டோம், ``எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான்

சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை. தடுப்பூசி விவகாரத்தில் எந்தக் குழப்பமும் வேண்டாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனை ஆசிரியர்கள் பின்பற்றினால் போதுமானது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.” என்றார்.

 

ஆணையரின் பேட்டியை படிக்க

CLICK HERE TO VIEW -ARTICLE

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.