பிளஸ்1 வகுப்புகள் அடுத்த வாரம் துவக்கம். வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகள்
தொடக்கம்: மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியீடு
சென்னை:
11ஆம் வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில்
தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
+1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்
ஒவ்வொரு பிரிவிலும் 10-15% கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு மாணவர்
சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே பிரிவுக்கு அதிக
மாணவர்கள் விண்ணப்பித்தால், 50 கொள்குறிவகை வினாக்கள் தயாரித்து தேர்வு வைக்கலாம் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் என்று ஏற்கனவே
அறிவித்துள்ளனர். தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்கள்
சேர்க்க குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை
வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு
உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில்
மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். ஏதேனும்
ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள்
விண்ணப்பித்தால் கொரோனா பரவல் சூழலை
கருத்தில் கொண்டு 15 சதவீதம் மட்டுமே அனுமதிக்க
வேண்டும். அதிகமான விண்ணப்பங்கள் வந்தால்
பள்ளி அளவில் தேர்வுகள் வைத்து
அனுமதிக்கலாம். ஜூன் 3வது வாரத்தில்
வகுப்புகளை தொடங்க வேண்டும். +2 மாணவர்களுக்கு
கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும்
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ்
அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments
Post a Comment