SBI வங்கி கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒரு சூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படி என்ன அறிவிப்பு?
SBI வங்கி கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒரு சூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படி என்ன அறிவிப்பு?
இதனால்
வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் வாருங்கள்
பார்க்கலாம்.
பொதுவாக நாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில் பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு. அதே
வங்கி வாடிக்கையாளர் வேறு கிளைகளில் பணம்
எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
அதோடு பணமும் குறைவாகத் தான்
எடுக்க முடியும்.
உச்ச வரம்பு அதிகரிப்பு ஆனால்
கொரோனா காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா (SBI) ஒரு சூப்பர் அறிவிப்பினை
கொடுத்துள்ளது எனலாம்.
அது நீங்கள் கணக்கு
தொடங்கிய கிளை தவிர மற்ற
கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச
வரம்பினை அதிகரித்துள்ளது தான் அந்த அறிவிப்பு.
கொரோனா காலத்தில் பயனுள்ள அறிவிப்பு ஏனெனில் இன்றைய
காலகட்டத்தில் பலரும் கணக்கு தொடங்கியது
ஒரு இடத்தில் என்றாலும், அவர்கள் வெளியூர்களில், வெளி
மாநிலங்களில் வசிக்கலாம். ஆக அவர்களால் இந்த
கொரோனா காலகட்டத்தில் அடிக்கடி வங்கி கிளைக்கு செல்லவும்
முடியாது.
இப்படியானவர்களுக்கு
எஸ்பிஐயின் இந்த அறிவிப்பு மிக
பயனுள்ளதாகவே இருக்கும். செல்ப்
செக் மூலம் ரூ. 1 லட்சம்
எடுக்கலாம் இது கொரோனா காலத்தில்
வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் விதமாக, எஸ்பிஐ செக்
அல்லது பணம் எடுக்கும் படிவம்
மூலம் திரும்ப பெறும் உச்ச
வரம்பினை அதிகரித்துள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியானது எஸ்பிஐ, செல்ப் செக்
போட்டு எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு
நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
வித்ட்ராவல் பார்ம் மூலம் எவ்வளவு?
இதே மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல்
பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு
25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.
இதே மூன்றாம் தரப்பு நபர் செக் மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம் மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக
மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சி
விவரங்கள் தரப்பட வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது
வரையில் அமல்
எஸ்பிஐயின் இந்த அதிரடி மாற்றங்கள் செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் எஸ்பிஐ-யின் நிகரலாபம் 80.15% அதிகரித்து, 6,451 கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது. இது
வட்டி வருவாய் அதிகரித்த நிலையில்
கண்டுள்ளது. வருவாய் அதிகரித்துள்ள நிலையில்
மோசமான கடன் விகிதங்களும் குறைந்துள்ளது.
No comments
Post a Comment