பள்ளி கல்வி இயக்குநர்பணியிடத்தை பள்ளி கல்வி கமிஷனராக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குநரின் பொறுப்புகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை, அரசின் சார்பில் செயலர்அல்லது முதன்மை செயலர் செயல்படுவர். அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குநர்கள் இயங்குவர். கடும்
போட்டிஅவர்களில் பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது.
அரசு தரப்பில் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருந்தாலும்,
பள்ளி கல்வி இயக்குநரே அதிகாரம்
மிக்கவராக இருப்பார்.பெரும்பாலான நிர்வாக பணிகளுக்கு, பள்ளி
கல்வி இயக்குநரே முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு அரசின்
செயலர் ஒப்புதல் வழங்குவார். அதனால், பள்ளி கல்வி
இயக்குநர் பதவிக்கு வர, மற்ற இயக்குநர்களிடம்
கடும் போட்டி உண்டு.இந்நிலையில்,
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசில் பல்வேறு
துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், பள்ளி
கல்வி நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குநர்
கண்ணப்பனின் அனைத்து அதிகாரங்களும், பள்ளி
கல்வி கமிஷனர் என்ற பதவிக்கு
அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன.
பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பில்,
டி.என்.பி.எஸ்.சி., செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி
நந்தகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிலர் எதிர்ப்பு
பள்ளிக்கல்வி,
தொடக்க கல்வி, தேர்வுத்துறை, மெட்ரிக்
உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும், கமிஷனரின்
கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகின்றனர்.இந்த
சீர்திருத்தம் ஒரு தரப்பில் வரவேற்பையும்,
இன்னொரு தரப்பில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்வி
இயக்குநர் நிர்வாகத்தை, ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிக்கு மாற்றக் கூடாது என
ஆசிரியர்கள் சங்கத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து
உள்ளனர்.
ஆங்கிலேயர்
ஆட்சியின் போது, 200 ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வி
இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதால், அதை
மாற்றக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
பரிந்துரை கடிதம்
No comments
Post a Comment