தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, May 27, 2021

தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய  மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

 

கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள்  பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சில் AICTE தமிழ்,இந்தி,தெலுங்கு,

குஜாராத்தி,மராத்தி,கன்னடம்.உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல்  பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும்.

பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய  மொழிகளில்  மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

 மேலும் 11இந்திய  மொழிகளிலும்  பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது.


No comments: