Header Ads

Header ADS

பள்ளிக்கல்வி அமைச்சர்- அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சந்திப்பு!

பள்ளிக்கல்வி அமைச்சர்-ஆசிரியர் மன்றம் சந்திப்பு!

 

மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்.திரு.மகேஸ்பொய்யாமொழிஅவர்களை  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் இன்று (17.05.2021)திருச்சியில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.இச்சந்திப்பில்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர்அவர்களின்பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்  தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியர் மன்றம் தமிழக அரசிற்கு என்றும் உற்றத் துணைவனாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

 

மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர் மன்றம் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் அளிக்கிறது.

மேலும்,கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கி வருகிறது என்றார்.


மேலும் தமிழ்நாட்டின் ஆசிரியப் பெருமக்கள்-அரசூழியர் பெருமக்கள் மனமுவந்து ஒருநாள் ஊதியம் சம்பளப் பட்டியல் வழியில் அளித்திடுவதற்கு காத்துக்கொண்டுள்ளனர். ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் வகையிலான‌‌ அரசாணை விரைந்து  வெளியிடப்பட வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.

 

ஒன்றியஅரசின் புதிய கல்விக் கொள்கையைதமிழக அரசு கடுமையாக ஆட்சேபனை செய்வதை ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது .


தமிழ்நாட்டின் நலனுக்கு  உகந்த வகையில்கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படுவதை ஆசிரியர் மன்றம் ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

 

ஆசிரியர் மன்றத்தின்வாழ்த்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும்  பள்ளிக் கல்வி அமைச்சர்அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

இச்சந்திப்பு இனிமையானதாக,ஆரோக்கியமானதாகஉணர்வு பூர்வமானதாக அமைந்திருந்தது என்று மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தெரிவித்துக் கொண்டார்.





No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.