வங்கி ஊழியர் வருகை; 50 சதவீதமாக்க அறிவுரை
வங்கி ஊழியர் வருகை; 50 சதவீதமாக்க
அறிவுரை
சென்னை:
வங்கிகளில் ஊழியர்கள் வருகையை, 50 சதவீதமாக குறைக்க, உறுப்பினர் வங்கிகளுக்கு, தமிழக மாநில வங்கியாளர்கள்
குழுமம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, அந்தக்குழுமம் அனுப்பிய சுற்றறிக்கை: கொரோனா பரவலை தடுக்க, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 50 சதவீத
ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர,
தமிழக அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி, 19ம் தேதி வரை,
வங்கிக் கிளைகள், மண்டல அலுவலகங்கள் உட்பட,
இதர அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி
ஊழியர்கள், பணிக்கு வர விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியாளர்கள் குழுமம்
ஏற்கனவே அறிவுறுத்திய கொரோனா தடுப்பு வழிகாட்டு
நெறிமுறைகளை, அடுத்த அறிவிப்பு வரும்
வரை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment