Header Ads

Header ADS

இன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள் -GOVT PRESS RELEASE NO-55- PDF FILE

இன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும்

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் 1


கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 2


நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலக் கட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் சுட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாகத்.தவிர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது


தீர்மானம் 3


நோய்த் தொற்றுப் பரவயைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளயில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனநோடு ஈடுபடுவது என்றும் தீர்மாளிக்கப்பட்டது.


தீர்மானம் 4

நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.


தீர்மானம் – 5

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.


   CLICK HERE TO DOWNLOAD GOVT PRESS RELEASE LETTER -55 PDF


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.