Header Ads

Header ADS

கொரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் திட்டம் முதல்வர் இன்று துவங்கி வைக்கிறார்- இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்  கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு

        உள்ளிட்ட 5 முக்கிய அரசாணைகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

 

அதில், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப

அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி இந்த திட்டத்தினை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று தொங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த டோக்கனில் கடையின் எண், பெயர், அட்டைத்தாரர் பெயர், தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

 

இந்த டோக்கனை வழங்கி 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொரோனா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.