Header Ads

Header ADS

18 முதல் 44 வயதுடைய(அத்தியாவசிய பணியில் உள்ள நபர்களுக்கு) இலவசமாக தடுப்பூசி செலுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- G.O 252

தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னுரிமை:


தமிழக அரசு விளக்கம்: தமிழகத்தில், 18 முதல், 44 வயது வரை உள்ளவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, முதல்வர்

ஸ்டாலின், சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்நிலையில், 18 வயது முதல், 44 வயது உடையவர்களில், யாருக்கெல்லாம் தடுப்பூசியில் முன்னுரிமை என்பதற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அதன் விபரம்


செய்தித்தாள்கள் மற்றும் பால் வினியோகம் செய்பவர்களுக்கு, தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மருந்தக பணியாளர்கள், ஆட்டோ, டாக்சி, பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், மின் ஊழியர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊடகம் சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். உணவு வினியோகம் செய்பவர்கள், மீன் வியாபாரிகள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிப்பதோடு, வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.