கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பள்ளி ஆசிரியை ரூ.1 லட்சம் நிவாரண நிதி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, May 13, 2021

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பள்ளி ஆசிரியை ரூ.1 லட்சம் நிவாரண நிதி



கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பள்ளி ஆசிரியை ரூ.1 லட்சம் நிவாரண நிதி

 

நாகப்பட்டினம்:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நாகையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி

ஆசிரியை, 1 லட்சம் ரூபாய் நிதி அனுப்பியுள்ளார்.

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு, சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை வசந்தா, 51. அப்பகுதி மாணவ --- மாணவியர் மட்டுமல்லாது ஏழை, எளியவர்களுக்கும், தன் பணத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்

 

.கடந்த ஆண்டு, கொரோனா பரவலின்போது, முதல்வர் நிவாரண நிதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.

 

தற்போது, கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து, ஆசிரியை வசந்தா , முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தன் சொந்த பணத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை,'ஆன்லைன்' வாயிலாக அனுப்பியுள்ளார்.

No comments: