இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் –ஆணை – JUDGEMENT COPY -18.03.2021
பல்லடம்
கல்வி மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் நமது இயக்கத்தை
சார்ந்த ஆசிரியை திருமதி பிரேமாவதி
அவர்களது மூத்தோர்
- இளையோர் ஊதிய முரண்பாட்டினை களைந்திடக் கோரும் விண்ணப்பமானது,
அவர் வேறு ஒன்றியத்தில் பணி
நியமனம் பெற்று, இவ்வொன்றியத்திற்கு மாறுதலில்
வந்துள்ளார் என குறிப்பிட்டு நிராகரிக்கப்பட்ட
நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு (W.P. No. 34455/
2019) தொடரப்பட்டு
06.01.2020-ல் சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது.
இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் – புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம் – நாள் : 03.09.2019. !!! PDF FILE CLICK HERE
இத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, (W.A. No. 178/ 2021) உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு (Division Bench) 18.03.2021ல் தள்ளுபடி செய்ததோடு, தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
இவண்,
மாவட்ட அமைப்பு,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,
திருப்பூர் மாவட்டம்.
No comments
Post a Comment