Header Ads

Header ADS

வங்கிகள் நாளை செயல்படாது & ஏப்ரல் மாதத்தில் இனி வர உள்ள வங்கி விடுமுறை நாட்கள்!

வங்கிகள் நாளை செயல்படாது - ஏப்ரல் மாதத்தில் இனி வர உள்ள வங்கி விடுமுறை நாட்கள்!

 

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

என்பதால், முக்கியமான வங்கி பணிகளை முடிக்க திட்டமிடும் முன் இதை செய்வது அவசியம்.

 

வங்கிகளில் முக்கியமான வேலைகளை முடிக்க திட்டமிடும் மக்கள் அதற்கு முன் வங்கிக்கு விடுமுறை நாட்கள் என்றெல்லாம் வருகின்றன என்பதை சரிபார்த்து திட்டமிட வேண்டும். விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், முக்கியமான வங்கி பணிகளை முடிக்க திட்டமிடும் முன் இதை செய்வது அவசியம்.

 

மற்ற மாதங்களை காட்டிலும் இந்த எப்ரல் மாதத்தில் வங்கிகள் அதிக நாள் விடுமுறையால் மூடப்பட உள்ளது. பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்த நாள், பிஹு, புனித வெள்ளி, ராம் நவ்மி, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட சில பண்டிகைகள் வங்கி விடுமுறைகளுக்கு காரணமாக உள்ளன. ஏப்ரல் மாத

துவக்கமே அதாவது 1-ம்- தேதியான இன்றே வங்கிகளுக்கு விடுமுறை நாளாக தான் துவங்குகிறது. வணிகளின் முழுவருட கணக்கு மூடப்படுவதால் இன்று விடுமுறை அதேசமயம் மீதமுள்ளவை வழக்கமான விடுமுறை நாட்கள்.

 

அதன்படி வங்கிகள் தங்கள் ஆண்டு கணக்குகளை க்ளோஸ் செய்யும் என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள காலண்டரின் படி ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று வங்கிகள் மக்கள் சேவைக்காக திறக்கப்படவில்லை. அதே போல ஏப்ரல் 2 ஆம் தேதியான நாளை கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான வங்கிகள் நாளையும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் புனித வெள்ளிக்கு சில மாநிலங்கள்

 

விடுமுறை அளிக்கவில்லை. எனவே இந்த விடுமுறை இல்லாத மாநிலங்களில் இருக்கும் சில வங்கிகள் வேலை செய்யும். அதன் பின் ஏப்ரல் 3-ஆம் தேதி வங்கிகளுக்கு வேலை நாள் தான் என்றாலும் கூட அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 4-ம் தேதி மீண்டும் வங்கிகள் மூடப்படும். ஏனென்றால் அன்று வார விடுமுறையான ஞாயிற்று கிழமை ஆகும். ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் நம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 பின்னர் பிஜு விழா / போஹாக் பிஹு / சீரோபா / டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் / விஷு உள்ளிட்டவை காரணமாக பல மாநிலங்களில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வங்கிகளுக்கு

விடுமுறை நாளாகும். ஏப்ரல் 15 - இமாச்சல தினம் / பெங்காலி புத்தாண்டு தினம் காரணமாக அம்மாநில வங்கிகளுக்கு விடுமுறை. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 21 ராம் நவ்மி / காரியா பூஜை காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாள்.

 

எனினும் வங்கி விடுமுறைகள் பல மாநிலங்களில் வேறுபடுகின்றன, அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் சில சந்தர்ப்பங்களின் அறிவிப்பை பொறுத்து இவற்றில் மாற்றங்கள் காணப்படுகின்றன. அதே போல ஏப்ரல் 10 மற்றும் 24-ம் தேதிகளில் மாதத்தின் இரண்டாது மற்றும் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.