அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேணும்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேணும்.. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு
பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை
59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக
அரசு கடந்த பிப்ரவரி 25-ம்
தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த
அரசாணையை ரத்து
செய்யக் கோரியும்,
அதற்கு தடை விதிக்க கோரியும்
திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது
நல வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,
அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை.
அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும்
எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக
அரசுப்
பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு
வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும்
வகையில் மட்டும் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளனர்.
அதாவது
தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல்
உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற
இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு
தேவையில்லாமல் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது'
என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில்
20% இட
ஒதுக்கீடு -ஆளுநர் ஒப்புதல்
இந்த வழக்கு தலைமை நீதிபதி
சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி
செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்
எழுப்பிய கேள்விகளுக்கு நீதிமன்றத்தில்
உரிய பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன்
மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.
No comments
Post a Comment