Header Ads

Header ADS

மாணவர்களை அவசியமின்றி பள்ளிக்கு வரவழைக்க கூடாது தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது சுகாதாரத்துறை அனைத்து துறைகளும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இரண்டாவது அலை காரணமாக 9 ,10, 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன அதே நேரத்தில் திட்டமிடப்பட்டு  பிளஸ் 2 தேர்வை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
 இந்நிலையில் ஒருநாள் இரண்டாவது அலை கொரோனா தமிழகத்தில் வேகம் எடுத்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் அவசியம் ஏதும் இன்றி அழைக்கக்கூடாது மேலும் சுகாதாரம் சுற்றுச்சூழல் தடுப்பு விழிப்புணர்வு காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஊர்வலங்கள் கட்டுரைப் போட்டி ,பேச்சுப் போட்டி ,ஓவியப்போட்டி ,போன்ற எந்த காரணத்தையும் காரணம் காட்டி பல மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
 இந்த உத்தரவின் நகல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தலைமையாசிரியர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.