விடுமுறை கேட்ட நிலையில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கி உத்தரவு
தமிழகத்தில்,
கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ்
2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற
வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது.
*பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை
அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்தனர்.*
*இந்நிலையில்,
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி
வழங்கப்பட உள்ளதாக, நமது நாளிதழில், இரு
தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.*
*இதுபற்றி,
தமிழக தலைமை செயலர், சுகாதார
செயலர், பள்ளி கல்வி செயலர்
ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி
பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி
வழங்க அனுமதித்தனர்.*
இதன்படி,
முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி
வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட கலெக்டர்
செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில்,
*'24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில், தினமும்''
ஆறு மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார்.*
Click here to download the order copy
*30க்குள்
தடுப்பூசி போட 'கெடு'பள்ளி
கல்வி துறையின் கீழ் பணியாற்றும், 45 வயதுக்கு
மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 30ம் தேதிக்குள் கொரோனா
தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும்
என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
*இந்த உத்தரவை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'இ - மெயில்' வழியே அனுப்பியுள்ளது.*
*மேலும்,
ஆசிரியர்களின் உடல்நிலையை பொறுத்து, சுகாதாரத்துறை மற்றும் டாக்டர்களின் பரிந்துரை
இருந்தால் மட்டுமே, ஊசி போடுவதில் இருந்து
விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.*
No comments
Post a Comment