தேர்தல் பணி வெற்றிகரமாக முடிய 50 செயல்பாடுகள்
1.காலை 9.30 மணிக்குத் தேர்தல் பணிமனைக்குச் செல்லவும்.
2. தேர்தல்
தொடர்பான இறுதி அறிவுரைகளைக் கேளுங்கள்.
ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளவும்.
3. மண்டல
அலுவலரின் அலைபேசி எண்ணைப் பெறவும்.
4. உங்கள்
வாக்குச்சாவடியின் இருப்பிடம், வழி, அலுவலர்கள் போன்றவற்றை
உங்கள் தனிப்பட்ட நாட் குறிப்பில் குறித்துக்
கொள்ளவும்.
5. இயன்றால்,
அலுவலர்கள் இணைந்து, வாக்குச்சாவடி செல்லவும்.
6. வாக்குச்சாவடி
செல்ல, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
7. இருப்பினும்,
தனிப்பட்ட வாகனங்களில் செல்வது நலம்.
8. வாகனங்களில்
காற்று, எரிபொருள் போன்றவற்றைச் சரிபார்க்கவும்.
9. வாக்குச்சாவடியை
அடைந்ததும், உள்ளூர் VAO , RI போன்றோரைச் சந்தித்து, தளவாடங்களின் அளவு, விளக்குகள், கழிப்பிட
வசதி, பாதுகாப்பு, போன்றவைகளைச் சரிபார்க்கவும்.
10. அவர்களது
அலைபேசி எண்களைச் சேகரிக்கவும்.
11. இரவு
உணவு, தேர்தல் நாளன்று, உணவு,
தேநீர் வழங்குதல் பற்றியும், அதற்கான முன் பணம்,
வழங்க வேண்டிய நேரம் பற்றி,
உறுதியாகக் கூறவும்.
12. அலுவலர்கள்
உள்ளுர் கட்சி முகவர்களின்
வருகைக்குப் பின், அவர்களுக்கான தெளிவான
நெறிமுறைகள் பற்றிக் கூறி, அவர்களது
அலைபேசி எண்களை, நட்புணர்வோடு பெறுங்கள்.
13. மண்டல
அலுவலர் வந்த பின், பொருட்களைச்
சரிபார்த்து, வாங்கவும்.
14. புதிய
உத்தரவுகள், மாறுதல்கள் ஏதேனும் உள்ளனவா என்று
அறிந்து கொள்ளுங்கள்.
15. தேர்தல்
செயலி மூலம், தளவாடங்கள் பெற்றுக்
கொண்டமைக்கு ஒப்புகைத் தகவல் அனுப்பவும்.
16. சிறிது
ஓய்வுக்குப் பின், அலுவலர் மேசைகள்,
முகவர்களுக்கான பெஞ்சுகள், இயந்திரங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்து, அவற்றைச்
சரியாக அமைக்கவும்.
17. வாக்காளர்
எளிதில் வந்து செல்லும் வண்ணம்,
முகப்புக் கதவின் குறுக்கே, கயிற்றால்
பிரிக்கவும். (அமைத்து விட்டு, இரவில்
அவிழ்த்து விடவும்)
18. இரவில்
எந்திரங்களை இயக்கிப் பார்க்க,அனுமதி இல்லை.
எனவே முயற்சிக்க வேண்டாம்.
19. எந்திரங்களை
மண்டல அலுவலர் அனுமதித்தால், இரவே,
சரியான இடங்களில் அமைத்து விடவும்.
20. அலுவலர்கள்
ஒன்றாக அமர்ந்து, தேர்தல் நாளன்று செய்ய
வேண்டிய நடைமுறைகளைத் தெளிவாகத் திட்டமிடவும்.
21. அனைவரும்
தெளிவாகச் செயல் படவும், ஐயங்கள்
தீரவும் இது உதவும்.காற்று
வீசாத, வாக்காளர் கண்களில் படுமிடங்களில் இரவே, போஸ்டர்களை அனைவரும்
சேர்ந்து, ஒட்டி விடவும்.
22. இயன்றவரை,
இரவு உணவு முடித்து, 10 மணிக்குள்
உறங்கச் செல்லவும். (உறக்கம் வந்தால்...)
23. காலையில்,
4.30 மணிக்கு எழுந்து, தயாராக இருங்கள்.
24. முகவர்களின்
வருகை, 5.30 க்குள் இருந்தால் நலம்.
25. அவர்களது
, சான்றிதழ்களைச் சரிபார்த்து, அவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை வழங்கவும்.
26. மாதிரி
வாக்குப்பதிவுக்குத் தயாராகி, இயன்றவரை 6.30 மணிக்குள் முடித்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.
27. மாதிரி
வாக்குப்பதிவுச் சான்றிதழ்களை நிரப்பி, கையெழுத்துப் பெறுங்கள்.
28. செய்தி
அனுப்பவும்.
29. சரியாக
7 மணிக்கு வாக்குப்பதிவைத் தொடங்குங்கள்.
30. செய்தி
அனுப்பவும்.
31. வாக்குப்பதிவு
எண்ணிக்கையை முறையாக, உங்கள் தனிப்பட்ட நாட்
குறிப்பில் குறித்து, 1 மணி நேரத்திற்கு ஒரு
முறை குறிக்கவும்.
32. செயலி
மூலம், அவ்வப்போது விவரங்களை அனுப்ப இது உதவிகரமாக
இருக்கும்.
33. முகவர்களின்
இருப்பை, அவ்வப்போது சரிபார்த்து அறிவுரை வழங்கவும்.
34. அவர்களிடம்
அலைபேசி இல்லை என்பதை, காவலர்
மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருங்கள்.
35. வாக்காளர்கள்
கூட்டம் சேராமல், பதட்டம் அடையாமல், ஒரே
வேகத்தில், வாக்குப்பதிவு நடக்கட்டும்.
36. குறிப்பிட்ட
கால இடைவெளிகளில், கூட்டம் குறைவான நேரத்தில்,
மாறி, மாறி உணவருந்தச் செல்லவும்.
37. 4 மணிக்குப்
பின் முகவர்கள் வெளியில் செல்ல அனுமதி இல்லை
என்பதை, அவர்களுக்கு, முன்கூட்டியே மீண்டும் நினைவு படுத்துங்கள்.
38. 6 மணிக்கு,
சாவடியின் கேட்டை மூடி, நிற்கும்
வாக்காளர்களுக்கு, கடைசியிலிருந்து, 1, 2 என வரிசை எண்
இட்ட, presiding officer கையெழுத்திட்ட, டோக்கன்களை
காவலர்
உதவியுடன் வழங்கவும்.
39. வாக்குப்பதிவு
முடிந்ததும், பதிவேடு, எந்திரம் காட்டும் எண்ணிக்கையை ஒப்பிடுங்கள்.
(சரியாகவே
இருக்கும்)
40. எந்திரங்களை,
முகவர்கள் முன்னிலையில்,சீலிடவும்.
41. அவர்களுக்கான,
சான்றிதழ்களை வழங்கவும். படிவங்கள் போதவில்லை என்றால், படிவங்களை நகல் எடுத்து வரச்
சொல்லுங்கள்.
42. எக்காரணம்
கொண்டும், நிரப்பிய படிவங்களை நகல் எடுக்கக் கொடுக்காதீர்கள்.
43. மண்டல
அலுவலரின் அறிவுரையைக் கேட்டு, VVPAT இன் மின்கலத்தைப் பிரிக்கவும்.
44. பூர்த்தி
செய்யப்பட்ட படிவங்களைக் கையெழுத்திட்டு, பிற அலுவலர்களிடம் தந்து,
சரி பாருங்கள்.
45. பதிவேடுகளின்
இறுதியில், அதன் முடிப்பை எழுதிக்
கையெழுத்திடவும்.
46. எல்லாக்
கவர்களையும், பிரித்து அடுக்கி வைக்கவும்.
47. சீலிட
வேண்டியவற்றிற்கு மட்டும், ஒட்டி, சீலிடவும்.
48. மண்டல
அலுவலர் வந்ததும், முறையாக ஒப்படைத்து, ஒப்புகை
பெறவும்.
49. உழைப்பூதியம்
பெற்று, அலுவலர்களுக்கு மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வழங்கி,
முகமலர்ச்சியுடனும், நட்புணர்வுடனும் நன்றி கூறுங்கள்.
50. இரவு
உணவை முடித்து, புறப்பாடு பற்றிச் சிந்திக்கவும். வீடு,
தொலைவு எனில் சாவடியில் தங்கிக்
காலையில் செல்லவும். முடிந்தால் அலுவலர்கள் அனைவரும் ஒன்றாகப் புறப்படுங்கள், நாட்டுப் பணியாற்றிய வெற்றி வீரர்களாய், பாதுகாப்பாய்...
No comments
Post a Comment