கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்படும்
🛑கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவசமா படிக்க 1ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
⭕மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய
இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை
⭕இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்
⭕கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுவர். இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன. தற்போது வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர ஏப்ரல் 1ம் தேதிமுதல் 19ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்
🛑விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
⭕குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
⭕வருமான சான்றிதழ்
⭕சாதி சான்றிதழ்
⭕குழந்தையின் புகைபடம்
🛑ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:
https://kvsonlineadmission.kvs.gov.in/
🛑விண்ணப்பிக்க கடைசி தேதி:
19:04:2021
🛑மேலும் விவரங்களுக்கு:
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission%20Schedule%202021-22_3.pdf
No comments
Post a Comment