மத்திய அரசு ஊழியர்களுக்கு 32% அகவிலைப்படி – உண்மை நிலவரம் என்ன? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, March 12, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு 32% அகவிலைப்படி – உண்மை நிலவரம் என்ன?

⇒ஊக்க ஊதிய சார்பான அரசாணைகள் -ஒரே தொகுப்பில்- PDF FILE -CLICK HERE


மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஜூலை 2021 முதல் 32 சதவீத அகவிலைப்படி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

 👉தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்-இயக்குநர் அறிவுரைகள்

அகவிலைப்படி உயர்வு:

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வரிவசூல் பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை உருவானது. இதனை சரிசெய்யும் பொருட்டு ஜனவரி 2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.


இது ஜூலை 2021 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த உத்தரவினை திரும்ப பெரும் நேரத்தில் மத்திய அரசு துறைகளில்

பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 2020 இல் DA 4%, ஜூலை 2020 இல் 3% அதிகரிப்பு ஏற்படும். இப்போது 2021 ஜனவரியில் 4% உயரும். இதன் மூலம் DA 17% -லிருந்து 28% வரை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.


பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் ஜூன் 2021 க்குள் DA மேலும் 3-4% அதிகரிக்கக்கூடும். இதன் மூலம், ஜூன் 2021 இல் தடையை நீக்கிய பின்னர் DA 30-32% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மத்திய

அரசால் DA நிறுத்தப்பட்ட போது, ​​2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை அரியர் தொகை எதுவும் பெறப்பட மாட்டாது என உத்தரவில் தெளிவாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments: