எம்ஃபில் ஊக்க ஊதியம் பெற மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா ? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, March 30, 2021

எம்ஃபில் ஊக்க ஊதியம் பெற மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா ?

TNHHSSGTA NEWS-

உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பெற கடைசி வாய்ப்பு 31.03.2021 - அரசாணை எண்: 116 & 37 தெளிவுரைகள்- click here


எம்ஃபில் ஊக்க ஊதியம் பெற  மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்காவிட்டாலும் பின் வரும் வரும் நாட்களில் நிச்சயமாக  கிடைக்கும் நண்பர்களே

ஊக்க ஊதிய சார்பான அரசாணைகள் -ஒரே தொகுப்பில்- PDF FILE

💐💐💐💐💐💐

10. 03. 2020 க்கு முன்பாக ஊக்க ஊதியம் பெற துறை முன் அனுமதி பெற்று எம்ஃபில் முடித்து இருந்து பல்வேறு காரணங்களால் ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி

அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்டு நமது பள்ளிக்கல்வி இயக்குநர்''அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக இதனுடைய அடுத்தடுத்த நிலைகளை நாம் அவ்வப்போது தெரிவித்து வருகிறோம்.

📲📲📲📲📲

இந்நிலையில்  மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு பூ..நரேஷ் ஐயா அவர்களிடம் ஊக்க ஊதியம் சார்ந்து கூறும்போது...

📲📲📲📲📲 அவரும் எம்ஃபில் முடித்து ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் நிதித் துறையின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.

இதில் பள்ளிக்கல்வி துறையின் வேலை நிறைவுபெற்றுவிட்டது..

நிதித்துறை சார்ந்த முடிவ எடுப்பது அரசு மட்டுமே என்று கூறி உள்ளார்.

📲📲📲📲📲📲

மேலும் அவர் கூறும்போது மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்காவிட்டால் எம்ஃபில் படிப்புக்கு ஊக்க ஊதியம் பெற முடியாமல் போய்விடும் என்று ஆசிரியர்கள் அச்சத்தில் இருக்க வேண்டாம்.  மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் திரு பூ..நரேஷ் ஐயா

அவர்கள் ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம்..

 அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

📲📲📲📲📲📲

 எனவே எம்ஃபில் ஊக்க ஊதியம் பெறுவதற்கான நிதித்துறையின் ஒப்புதல் மார்ச் 31 ல் கிடைக்காவிட்டாலும் பிறகு வரும் நாட்களில் நிச்சயமாக கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருங்கள்.

இதற்கான நமது அடுத்தடுத்த முயற்சிகளும் தொடரும்...

நல்லதே நடக்கும்

No comments: