2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, March 13, 2021

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.



1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

 

2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

 

3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000

 

4. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு

 

5. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

 

 

6. முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500  ஆக உயர்த்தப்படும்

 

7. 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்

 

8. ஆறுகள் மாசடையாமல் தடுக்க பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும்

 

9. பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்

 

10. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

 

11. சென்னை  மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்



 

12. பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக தனி ஆணையம்

 

13.சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ, 10,000 மானியம்

 

14. மகளிர் மகப்பேறு உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும்

 

15. ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்

 

 

16. 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி

 

17. கல்வி நிறுவனங்களீல் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

 

18. அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பபு 12 மாதங்களாக அதிகரிப்பு

 

 

19. போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்

 

20.  நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்

 

21. 15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன்

 

 

22. இந்து ஆலயங்களில் குடமுழுக்கு கெய்ய ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும்

 

23. பழங்குடியின பட்டியலில் மீனவர் சமுதாயம்

 

24. கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும்

 

 

25. கிராமப்புற பூசாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்

 

26. கல்வியை மாநில பட்டியலில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்

 

27.உழவர் சந்தைகள் விரிவுப்படுத்தப்படும்

 

28. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்


29.ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை துரிதப்படுத்தப்படும்

 

30. ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை

 

31. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்

click here to download -pdf file 128 pages

No comments: