Header Ads

Header ADS

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிடுக: தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் 23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் தொடரில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சந்தைப்பேட்டை நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (பிப். 18) நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டச் செயலாளர் .சு.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன், மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன்

ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் 'மன்றம்' நா.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், "பிப்ரவரி 20-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநிலம் தழுவிய தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் மன்ற உறுப்பினர் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும்.

 

2020-2021 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் மன்ற உறுப்பினர் பட்டியலை மார்ச் 15-க்குள் ஒப்படைக்க வேண்டும்.

 

சட்டப்பேரவையில் 23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் செ.சண்முகநாதன், அந்தோணிமுத்து, துணை தலைவர் சிவா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் .ரவிச்சந்திரன், முத்துவேல், கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.