விதி 4(3) ன் படி ஊதிய நிர்ணயம் கிடையாது என மறுத்த அதிகாரியின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதிப்பு
வெற்றி! வெற்றி! வெற்றி! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மிகப்பெரிய வெற்றி!
அதிகாரிகள் 1.1.2006 முதல் விதி
4(3)கிடையாது என விதிக்கு
முரணாக ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை
துன்பப்படுத்தினர்.
விதி 4(3)என்பது ஒருவர் தனக்கு
கூடுதல் சம்பளம் வேண்டும்
என்றோ அல்லது கூடுதல்
படி வேண்டும் என்றோ கேட்பது அல்ல.
விதி 4(3) என்பது ஆசிரியர்
மற்றும்
அரசு ஊழியர் ஒருவர்
தான்
பதவி
உயர்வு பெற்று பணியாற்றும்
நிலையில் கீழ் நிலை பதவியில்
தான் பெற்றிருக்கும் சம்பளத்தை விட குறைவான ஊதியம்
பெறும் ஒரு அவல
சூழ்நிலை ஏற்படும் பொழுது
அதனை சரி செய்வதற்காக
அரசால் போடப்பட்ட விதிதான் விதி 4(3).
ஆனால் சில அதிகாரிகள் விதி
4(3 )ஐ 01.01.2006 முதல் மறுத்து வந்தனர்.
அவ்வாறு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றிய மன்ற பொறுப்பாளரான திரு.சா.ஜான்சன் மெல்கிசதேக் ஸ்டாலின் என்பவர்க்கு 01.08.2015 முதல் கீழ் நிலை பதவியில் பெறும் ஊதியத்தை விட, பதவி உயர்வு
பணியில் குறைவான
ஊதியம் பெறும்
அவல நிலை ஏற்பட்டது. அதனை
அன்னார் விதி 4(3)இன் படி 01.08.2015 முதல்
சரி செய்து இந்நாள் வரை
பெற்றுவந்தார். ஆசிரியர்களுக்கு தடைகள்
ஏற்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ள ஆழ்வார்திருநகரி
வட்டார கல்வி அலுவலர் அவர்கள்,
அன்னார் 01.08.2015 முதல் பெற்று வந்த
விதி 4(3) ஊதிய நிர்ணயத்தை தற்போது
ரத்து செய்து பல லட்ச
ருபாயை திருப்பி கட்ட அன்னாரை
மிகவும் துன்பபடுத்தினார். மேலும் இதற்காக அன்னாருக்கு
8 மாதமாக தேர்வுநிலையை அனுமதிக்காமல் வதைத்து வந்தார்.
வெகுண்டெழுந்த தூத்துக்குடி
மாவட்ட, ஆழ்வார் திருநகரி ஒன்றிய மன்றத்தின் செயலாளர்
திரு எட்வின் அவர்கள் மன்றத்தின் நெல்லை சிங்கம் திரு
ராஜேந்திரன் அவர்களிடம் முறையிட்டார்.
தம்
எண்ணம் மூச்சு எல்லாவற்றையும் இயக்கத்திற்காகவே அர்ப்பணித்துகொண்டிருக்கும்
நெல்லை திரு ராஜேந்திரன் அவர்கள்
உடனடியாக மன்றத்தின்
ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் அண்ணன் மன்றம் நா
சண்முகநாதன் அவர்களை தொடர்பு கொள்ளவே,
அன்னார் அனைவரையும் உடனடியாக மதுரை வரச்சொல்லி மதிப்புமிகு
வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள்
மூலம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மதிப்புமிகு வழக்கறிஞர் அவர்கள் கீழ்நிலைப்பதவியின் ஊதியத்தை
விட பதவிஉயர்வு பணியில் குறைவான சம்பளம்
பெறுவது இயற்க்கை நீதிக்கு (Natural justice) முரணானது என வாதிட்டு ஆழ்வார்திருநகரி
வட்டார கல்வி அலுவலரின் பல லட்ச ரூபாய் திருப்பி
செலுத்தும் ஆணைக்கு இன்று
(24.02.2021) தடையானை பெற்றுத் தந்தார்கள்.
பல
சங்கங்கள் பல ஆண்டுகளாக பெற்றுத்தர
முடியாத விதி
4(3)ன் பலனை நெல்லை சிங்கம்
திரு. ராஜேந்திரன் அவர்கள் மன்றத்தின் பொதுச்
செயலாளர் அவர்கள் மூலம் நீதிமன்றத்தை
நாடி பெற்றுத் தந்தார்கள்.
மன்றத்தினர்
கோரிக்கை வைத்த உடன் உடனடியாக
நடவடிக்கை எடுத்து பெற்று தந்த
பொதுச்செயலாளர் மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கும், திரு. ராஜேந்திரன் அவர்களுக்கும்
ஆழ்வார்திருநகரி வட்டார மன்றம் சார்பில்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆழ்வார்திருநகரி வட்டார கல்வி அலுவலர் அவர்களின் Recovery ஆணை! CLICK HERE
நீதிமன்ற தடையாணை வரும் வெள்ளியன்று (26.02.2021) குழுவில் வெளியிடப்படும்.
R.எட்வின்,
வட்டார
செயலர்,
தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மனறம், திருச்செந்தூர் கல்வி
மாவட்டம்
No comments
Post a Comment