அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! pdf file
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Summer Sequential Programme மூலம் பயின்ற M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!
பல்கலைக்கழக
மானியக் குழு 1956 - ஆம் ஆண்டு சட்டப்பிரிவு
22 - இன் கீழ் பட்டங்களை வரையறை
செய்துள்ளது . நடுவண் அரசு சட்டம்
அல்லது மாநில அரசு சட்டம்
அல்லது 1956 - ஆம் ஆண்டு பல்கலைக்கழக
மானியக் குழுவின் பிரிவு 3 - இன்படி பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனம் போன்றவற்றால் மட்டுமே அவ்வாறான பட்டங்களை
வழங்க இயலும் . அழகப்பா பல்கலைக்கழகம் , தமிழக
அரசின் State Legislature-
இன்படி 1985 - இல் உருவாக்கப்பட்ட அரசு
பல்கலைக்கழகம் ஆகும் . அழகப்பா பல்கலைக்கழகம்
, பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டப்பிரிவு 2 ( 1 ) மற்றும் 12 ( B ) - இன் அங்கீகாரமும் பெற்றுள்ளது
, எனவே . அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற
மாணவர்கள் பெறும் பட்டம் மத்திய
, மாநில அரசின் அங்கீகாரம் பெற்றதாகக்
கருதப்படும் . மேலும் அழகப்பா பல்கலைக்கழகம்
, தேசிய தர நிர்ணய ஆணையத்திடமிருந்து
, முதல் சுற்றில் ( 2005 - இல் ) 3.01 தரப்புள்ளியுடன் ' A'Grade- ம் , இரண்டாவது சுற்றில்
( 2011 - இல் ) 3.21 தரப்புள்ளிகளுடன் ' A ' Grade- ஐத் தக்கவைத்ததுடன் , மூன்றாவது
சுற்றில் ( 2017 - இல் ) 3.64 என்ற உயர்ந்த தரப்புள்ளி
பெற்றதால் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மற்றும் பல்கலைக்கழக
மானியக்குழுவும் இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு
தரவரிசை -1 மற்றும் தன்னாட்சி வழங்கியுள்ளது
. இதனால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியின்றி புதிய பாடத்திட்டங்கள் . புதிய
துறைகள் , பள்ளிகள் மற்றும் மையங்கள் ஆகியவற்றை
ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கின்ற கல்வி கட்டமைப்புடன் ஆரம்பித்து
நடத்தலாம் . அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட
ஆய்வியல் நிறைஞர் ( கோடை காலத் தொடர்திட்டம்
) படிப்பு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும்
நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு 2016 , 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் நடத்தப்பெற்றன
. 2016 - இல் NAAC- இன் ' A ' Grade- ம் 2017 - இல் ' A + ' Grade- ம் பெற்றதால் MHRD மற்றும்
UGC- ல் Category 1 தரத்திற்கு உயர்த்தப்பட்டதால் ( UGC- இன் அனுமதியின்றி பாடங்கள்
, துறைகள் , etc. ஆரம்பித்து நடத்த தன்னாட்சி பெற்றதால்
அப்பட்டங்கள் UGC- இன் அனுமதி பெற்றதாகவே
கருதலாம் . மேலும் அழகப்பா பல்கலைக்கழகம்
நடத்திய ஆய்வியல் நிறைஞர் ( கோடை காலத் தொடர்திட்டம்
) படிப்பு , அழகப்பா பல்கலைக்கழகத்தின் முழுநேர
படிப்பின் ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட
பாடத்திட்டம் ( Syllabus )
தேர்ச்சி பெறக் குறுமம் வழிகாட்டுதலுக்கான
விதிமுறை , போன்றவை முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால்
இப்படிப்பு பகுதிநேரப்படிப்பிற்கு இணையானதாகக் கருதலாம்.
No comments
Post a Comment