அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, January 20, 2021

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை

 

அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் 

என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.


இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்கள் , வீடு கட்டும் முன்பணம் பெற்று தமிழ்நாட்டில் வீடு கட்ட உத்தேசித்தால் , அவ்வூழியர்கள் எந்த மாவட்டத்தில் வீடு கட்ட உத்தேசித்துள்ளனரோ அந்த மாவட்ட ஆட்சித் தலைவரே வீடு கட்டும் முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.



No comments: