ஆசிரியர் காலிப்பணியிட தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !!
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்தும் சில அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.
🔮அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில்
கொரோனா பரவல் காரணமாக கடந்த
9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களுக்கு
இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு
நடத்தலாம் என்பது குறித்து முதல்வருடன்
ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் கூறி
இருந்தார்.
🔮இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு
பின்னரே
பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை அறிவிப்பு
வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்து
உள்ளார். மேலும் பள்ளிகள் வாக்குப்பதிவு
மையங்களாக மாற்றப்படும் என்பதால் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம்
ஏற்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
🔮தமிழகத்தில் காலியாக
உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாகவும், அது குறித்த தேர்வு
அட்டவணை முதல்வருடன் ஆலோசித்த பின்னர் விரைவில் வெளியிடப்படும்
எனவும் அமைச்சர் கூறி உள்ளார்.
No comments
Post a Comment