தமிழகத்தில் 9, 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பு – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!!
தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
🛑பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணாமாக 2020 மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் பாதிப்பு குறைந்த காரணத்தால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஜனவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. தமிழகத்திலும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
🛑தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மேலும் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
🛑9, பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 1 அல்லது 2ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment