Header Ads

Header ADS

SBI : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு ... ஜனவரி 1 முதல் புதிய விதி

SBI : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு ... ஜனவரி 1 முதல் புதிய விதி

 

CTSல் சிக்கல்களை தீர்க்கும் செக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். CTSக்கு வெளியே கொடுக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு உறுப்பினர் வங்கிகள் இதே போன்ற ஏற்பாடுகளைச் செயல்படுத்தலாம்.


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India (SBI)) 2021 ஜனவரி 1 முதல் செக்குகளுக்கான (cheque) ''பாசிட்டிவ் பே சிஸ்டத்தை'' ('Positive Pay System') செயல்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் ரூ. 50,000 க்கு மேல் செலுத்துதல்களுக்கு முக்கிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்த

வேண்டும். SBI தனது இணையதளத்தில், "ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 01/01/2021 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை (PPS) அறிமுகப்படுத்துகிறோம், செக் (Cheque) வழங்குபவர் இப்போது அக்கவுன்ட் நம்பர், செக் நம்பர், செக் அமவுன்ட் போன்ற விவரங்களை வழங்க வேண்டும் , செக் செலுத்துதலுடன் தேதி செலுத்துபவரின் பெயரை (account number, cheque number, cheque amount, cheque date payee name) சரிபார்க்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

சில மாதங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) செக்கிற்காக 'பாசிட்டிவ் பே சிஸ்டத்தை' தொடங்க முடிவு எடுத்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் (RBI Governor Shaktikanta Das) வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை காப்பதற்கும், செக் செலுத்துதல் தொடர்பாக குற்றம் மற்றும் மோசடி வழக்குகளை குறைப்பதற்கும் இந்த முறையை அறிவித்தார். 'பாசிட்டிவ் பே சிஸ்ட (PPS)' அம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

 

பெரிய மதிப்புள்ள செக்குகளின் (cheque) முக்கியமான தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் செயல்முறை 'பாசிட்டிவ் பே சிஸ்டம்' என அழைக்கப்படுகிறது. செக் வழங்குபவர் SMS, மொபைல் ஆப்ஸ், இணைய வங்கி (internet banking), ATM போன்ற சேனல்கள் மூலம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கிறார். அந்த செக்கின் சில குறைந்தபட்ச விவரங்கள் (தேதி, பயனாளியின் பெயர் / பணம் செலுத்துபவரின் பெயர், தொகை போன்றவை (date, name of the beneficiary / payee, amount)) கொடுப்பவரின் வங்கியில், இந்த செயல்முறையின் கீழ் CTS வழங்கிய செக்குடன் கிராஸ் செக்கிங் செய்யப்படுகிறது. இதில் ஏற்படும் முரண்பாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

 


நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India - NPCI) CTAல் பாசிடிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, அதை பங்கேற்பு வங்கிகளுக்கு கிடைக்கச் செய்யும். ரூ .50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கு காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இந்த வசதியை வழங்கும். CTSல் சிக்கல்களை தீர்க்கும் செக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். CTSக்கு வெளியே கொடுக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு உறுப்பினர் வங்கிகள் இதே போன்ற ஏற்பாடுகளைச் செயல்படுத்தலாம். "செக் (cheque) கட்டணம் பாதுகாப்பாக இருக்க ஜனவரி 1 முதல் SBI பாசிடிவ் பெ சிஸ்டம் முறையை அறிமுகப்படுத்துகிறது. மேலும் அறிய, உங்கள் அருகிலுள்ள SBI கிளையை தொடர்பு கொள்ளுங்கள்" என்று SBI ட்வீட் செய்துள்ளது.

 

 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.