CPS ஒழிப்பு இயக்கம்- தீர்மானங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 6, 2020

CPS ஒழிப்பு இயக்கம்- தீர்மானங்கள்




CPS ஒழிப்பு இயக்கம்.


CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற காணொளி வாயிலான ஆலோசனைக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 

கடந்தகால இயக்க நடவடிக்கைகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் விளக்கிப் பேசினார்..

 

எதிர்கால இயக்க நடவடிக்கைகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் செல்வக்குமார் முன்மொழிவுகளை சமர்பித்தார்.

 

மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.

 

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

🌰🌰🌰🌰🌰🌰🌰

மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்கம் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்தும் விதமாக..

 

25.11.2020 அன்று நடைபெற்ற, மாண்புமிகு தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தையும்,..

30.11.2020&01.12.2020 முதல் 04.12.2020 வரை நடைபெற்ற அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தையும் மாநிலம் முழுவதும் மிகச்சிறப்பாக எழுச்சியோடு செயல்படுத்திய பல்லாயிரக்கணக்கான CPS ஒழிப்புப் போராளிகளுக்கு மாநில மையத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கொள்கிறது.

🍇🍇🍇🍇🍇🍇🍇

04.12.2020 அன்று சிவகங்கையில் மாண்புமிகு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,

 CPS ஒழிப்பு என்கிற ஒற்றைக்கோரிக்கையை நிறைவேற்றி ஆறு இலட்சம் குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை மாண்புமிகு தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைத்து, கோரிக்கை வைக்கப்பட்டது..

 

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட CPS ஒழிப்புப் போராளிகளை மாநில மையம் மனதார பாராட்டுகிறது.

🌈🌈🌈🌈🌈🌈🌈

மேலும் CPS ஒழிப்பு இயக்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியும், இயக்கத்தில் பங்கேற்றும், அறிக்கை வெளியிடப்பட்ட JSR தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டனியின் தலைமைக்கும் அதை முடிவாக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநில மையத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

🧢🧢🧢🧢🧢🧢🧢

தீர்மானங்கள்

1.CPS ஒழிப்பு என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் அனுப்புவது.

🎓🎓🎓🎓🎓🎓🎓 2.தன்னெழுச்சியாக நடைபெறும் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை 07,08,09.12.2020 ம் தேதி வரை நீட்டிப்பு செய்வது.

3.CPS திட்டத்தை இரத்து செய்யக்கோரி, மாண்புமிகு தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள்,ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்குவது.

 

 CPS திட்டத்தை இரத்து செய்திட ஆதரவு கேட்டு அனைத்து கட்சித் தலைவர்களைச் சந்தித்து மனு வழங்குவது..

 

 CPS திட்டத்தை இரத்து செய்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும்,நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது..

 

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,மற்றும் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் 15,16,12.2020 ஆகிய தேதிகளில் சென்னையில் முகாமிட்டு மேற்கூறிய பணிகளை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

🌎🌎🌎🌎🌎🌎🌎

4.CPS ஒழிப்பு இயக்கத்தின் முக்கிய வலைதளமான Telegram App ல் இம்மாத இறுதிக்குள் ஒரு இலட்சம் உறுப்பினர்களை இணைப்பது.

🍫🍫🍫🍫🍫🍫🍫

5.மாவட்ட அளவில் அமைப்பினை உருவாக்காத மாவட்டங்கள் 15.12.2020 தேதிக்குள் அமைப்பினை உருவாக்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்திட முடிவு செய்யப்பட்டது.

🌳🌳🌳🌳🌳🌳🌳

6.18.12.2020 அன்று CPS திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரில் நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் மிக எழுச்சியோடு நடத்துவது..

🏓🏓🏓🏓🏓🏓🏓

ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

எடுக்கப்பட்ட முடிவுகளை பீனிக்ஸ் பறவைகளைப் போல் மிக வேகமாக,நேர்த்தியாக முன்னெடுப்போம்..

🪀🪀🪀🪀🪀🪀🪀

கைக்கு எட்டிய தூரத்தில் நமக்கான வெற்றி்.

 

இலக்கை நோக்கிப் பயணிப்போம்.

இறுதி வெற்றி நமதே

🌌🌌🌌🌌🌌🌌🌌

தோழமையுடன்,களத்தில்,..

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

CPS,ஒழிப்பு இயக்கம்.

🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳

No comments: