இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது
இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது. கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய பரிந்துரையில், 2-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள், அவர்களுக்கான வீட்டுப்பாடம் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தகப் பைகளின் எடை, அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது -
பள்ளிகளில் டிஜிட்டல் எடை இயந்திரங்கள் வைக்கப்பட வேண்டும் - அதைப் பயன்படுத்தி, புத்தகப் பைகளின் எடையை தொடர்ந்து மதிப்பிட வேண்டும் -
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது உள்ளிட்ட சேவைகள் தரமானதாக இருக்க வேண்டும் - அனைத்து மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை, பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் -
2-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வீட்டுப்பாடம் தரவேண்டும் - 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வீட்டுப்பாடம் தரவேண்டும் - 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினந்தோறும் 2 மணி நேரம் வீட்டுப்பாடம் தரப்பட வேண்டும் -
பள்ளிகளில் மாணவர்கள் விளையாடவும், இதர நூல்களை வாசிக்கவும் போதுமான நேரம் வழங்க வேண்டும் -
இந்தப் பரிந்துரைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றை அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments
Post a Comment