பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 7, 2020

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம் கோபியில், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்தான், தேர்வு முறையில் ரேங்க் சிஸ்டம் குறைக்கப்பட்டது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ரேங்க் சிஸ்டம் தற்போது இல்லை.'நீட்' தேர்வுக்காக

கடந்தாண்டில், 3,942 பேருக்காக, 96 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 17 ஆயிரத்து, 820 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவாகும்.

 

கொரோனா சூழலில், 60 சதவீத பாடங்களை போதித்து, 40 சதவீத பாடத்தை குறைத்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால், கொரோனா சூழலில், நாட்கள் ஓடிக்கொண்டே உள்ளது. பள்ளியை திறக்க இயலவில்லை. எனவே, பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments: