Header Ads

Header ADS

தமிழகத்தில் உருமாறிய கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பது பற்றி முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்

 

தமிழகத்தில் உருமாறிய கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பது பற்றி முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.*


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடவில்லை.இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.


இதனிடையே டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக இன்று ஆலோசனை நடத்துகிறார். உருமாறிய கொரோனா அச்சம் காரணமாக கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள சூழலில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்று ஆலோசனை முடிந்த பிறகு இது பற்றி அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.