அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு -பத்திரிக்கை செய்தி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, December 18, 2020

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு -பத்திரிக்கை செய்தி

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 

சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது.


அதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டதால் நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.


அதன்படி அரசு ஊழியர்கள் மற்றம் ஒய்வூதிய தாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை அந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்த்தி

வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. எனவே பழையபடி 17 சதவீத அகவிலைபடி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.


இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் அகவிலைபடியை 17 சதவீதத்தில் இருந்த 21 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அரசு ஊழியர்களும் , ஒய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.


No comments: