4,726 பணியிடங்கள்! ரூ.93 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!
4,726 பணியிடங்கள்! ரூ.93 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!
மொத்தம் 4,700-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 93 ஆயிரம் ரூபாய் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாங்க.
பணியாளர் தேர்வு வாரியம்:- மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட SSC எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது மத்திய அரசுத் துறையில் உள்ள எழுத்தர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி
மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:- SSC சார்பில் தற்போது 4,726 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) / ஜூனியர் செயலக உதவியாளர் (ஜே.எஸ்.ஏ) - 1,538, அஞ்சல் உதவியாளர் (பிஏ) / வரிசையாக்க உதவியாளர் (எஸ்ஏ) - 3,181, தரவு நுழைவு ஆபரேட்டர் (DEO) - 7 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி:- மேற்கண்ட பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது
வரம்பு:- தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கான அறிவிப்பில் வயது வரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் மற்றும் காலிப் பணியிடங்கள்:- எஸ்எஸ்சி தேர்வு வாரியத்தின் சார்பில் 4,726 பணியிடங்களுக்கு ஊதியம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்.டி.சி மற்றும் ஜே.எஸ்.ஏ-க்கான ஊதிய நிலை ரூ.19,900 முதல் ரூ.63,200, பி.ஏ / எஸ்.ஏ மற்றும் டி.இ.ஓ கிரேடு ஏ-க்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு ரூ.29,200 முதல் ரூ.93,300 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:- மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்திற்குச்
சென்று முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:- மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் டிசம்பர் 21, 2020ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றுகளையும் முழுமையாக விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.
தேர்வு மற்றும் தேர்வு முறை:- எஸ்எஸ்சி-யின் தற்போது வெளியிடப்பட்டுள்ள பணிகளுக்கான தேர்வு 2020 ஏப்ரல் 12 முதல் 27 தேதிக்குள் நடைபெறும். தேர்வு செயல்முறை: அடுக்கு -1 தேர்வைத் தேர்வுசெய்தவர்கள் விளக்க வகை அடுக்கு -2 தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு:- இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது
மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும். வரும் டிசம்பர் 21, 2020ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
No comments
Post a Comment