ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதால் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையினை EMIS - ல் பதிவேற்றம் செய்து கீழ்க்காணும் ஆவணங்களை தயார் நிலையில்
வைத்துக்கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் EMIS - ல் பதிவேற்றம் செய்த மாணவர்களின் எண்ணிக்கை விபரப்பட்டியல் குறிப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
2. பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் இதில் பதிவேற்றம் செய்யும்போது ஆசிரியர்களின் பாடங்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பாடங்களின் பிரிவினை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய கூடாது
3. மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களின் இரண்டு நகல்கள் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
No comments
Post a Comment