CPS ஒழிப்பு இயக்கத்தின் வலைதளங்களில் ஒன்றான Telegram App ல் 20,000 ற்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக்கொண்டுள்ள நிகழ்வு சரித்திர சாதனை..
CPS ஒழிப்பு இயக்கம்..வாழ்த்துக்கள்.
CPS ஒழிப்பு இயக்கத்தின் அறைகூவலை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ..
CPS திட்டத்தை இரத்துசெய்யக் கோரி மின்னஞ்சல் இயக்கம் நடத்துவது என்கிற முடிவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்று மின்னஞ்சல் அனுப்பியதாக வரும் செய்திகள் உற்சாகமளிக்கிறது.மகிழ்ச்சி அளிக்கிறது..
இவ்வியக்கத்தில் இணைத்துக்கொண்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
பிரமிக்க வைக்கிறது..
இதுவொரு யுகப்புரட்சி..
ஆம்
நண்பர்களே!
CPS ஒழிப்பு இயக்கத்தின் வலைதளங்களில் ஒன்றான Telegram App ல் 20,000 ற்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக்கொண்டுள்ள நிகழ்வு சரித்திர சாதனை..
அசுர
வேகத்தில் தெளிவான திட்டமிடலுன் பயணிக்கிறது CPS ஒழிப்பு இயக்கம்.
தோள்கொடுக்கும் தோழமைகளுக்கும், முன்னெடுக்கும் போராளிகளுக்கும்,வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது..
வேறு
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.
நம்பிக்கையுடன்,
களத்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.
CPS ஒழிப்பு இயக்கம்.
No comments
Post a Comment