தேசிய அளவில் பிரம்மாண்ட போட்டி முதல் பரிசுக்கான தொகை அறிவிப்பு ! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 15, 2020

தேசிய அளவில் பிரம்மாண்ட போட்டி முதல் பரிசுக்கான தொகை அறிவிப்பு !



சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய அரசு பெரியளவில் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியின்

நவ் பாராத் உதயானில் (புதிய இந்தியா பூங்கா) அமையவுள்ள பிரம்மாண்ட கட்டிடத்தின் வடிவமைப்புக்கான யோசனைகளை  மக்களிடம் பெறுகிறது.

அதாவது மத்திய பொதுப்பணித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இதற்கான போட்டியை மக்களிடம் நடத்துகிறது.

 

இந்திய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் பங்குபெறும் வகையில் நடத்தப்படும் இந்தப் போட்டியில், கட்டிட வல்லுநர்கள், கட்டிட நிறுவனங்கள், மாணவர்கள், மாணவர் குழுக்கள், கட்டிடம் மற்றும் திட்டமிடல் பள்ளிகள் / கல்லூரிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர நிறுவனங்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ பங்குபெறலாம்.

இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ 5 லட்சமும், ஐந்து ஊக்கப் 

பரிசுகளாக தலா ரூ 1 லட்சமும் வழங்கப்படும். இதன் முக்கிய அம்சங்களை விளக்கும் வகையில் இணையக் கருத்தரங்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் வரும் டிசம்பர் 11ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை 2020 டிசம்பர் 11 அன்று மாலை 7 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவைப்படின், இப்போட்டியின் நீதிபதிகளின் முன் 2020 டிசம்பரின் இரண்டாம் பாதியில் விளக்கமளிக்க வேண்டியதாக இருக்கும். டிசம்பர் மாத கடைசி வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. 

 


No comments: