டிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, November 28, 2020

டிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி

 



இறுதியாண்டு  மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய 

தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

 

இதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஏற்பாடுகளை, உயர் கல்வித்துறை செய்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.


புயல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக, வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படுமா; தள்ளி வைக்கப்படுமா என, மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.

 

 இந்நிலையில், திட்டமிட்டபடி இறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். புயல், கனமழை போன்றவை வந்தால், கல்லுாரிகளை வேறு தேதியில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



No comments: