தமிழகத்தில் திட்டமிட்டபடி வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது . - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 9, 2020

தமிழகத்தில் திட்டமிட்டபடி வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது .



தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று தாக்கும் குறைந்து வருவதையடுத்து. நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்தது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பள்ளி திறப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து  தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இன்று 

பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து திட்டமிட்டபடி வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதில் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லலாம் என்று அறிவிக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments: