தலைவன் | தலைவி |ஐந்திணைஎழுபது.
ஐந்திணை எழுபது பதிணென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
மூவாதியார் என்னும் புலவர்
இதை
எழுதியுள்ளார்.
தோழி
தலைமகனை வரைவு கடாயது என்ற தலைப்பில் இப்பாடலை இயற்றியுள்ளார்.
அவரை
பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி
மட.. மகாதூஉம் படர் சாரல்
கானக
நாட மறவல் வயங்கழைக்கு யான் இடை நின்ற புனை..
அவரைக்கொடிகள் நிறைந்த பசுமையான கதிர்களுடைய தினைப்புவனத்தில் இளைய கவரிமான்கள் மேய்கின்ற மலைநாட்டுத் தலைவனே...
அணிகலன்கள் அணிந்த தலைமகளுக்கும், உமக்கும்
நடுவே புனையாக இருந்த என் உதவியை மறக்காமல் அவளை மணந்து என்னை மகிழ்விப்பாயாக..
தோழி
தலைவனிடத்தில் கூறுதல்..
கொல்லைப்புனத்த அகில் சுமந்து கல் பாய்ந்து வானின் அருவி ததும்ப, கவினிய நாடன் நயம் உடையன் என்பதனால் நீப்பினும் வாடல் மறந்தன, தோள்.
#தலைவி
#தலைவன்
No comments
Post a Comment