Header Ads

Header ADS

பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தேவையான அளவில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணி நியமனங்களின் போது பலர் வழக்கு தொடர்வதால் நியமனங்கள் தாமதமாகிறது.

 அதனை தவிர்த்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினா

பணியிடங்களை நிரப்பும்போது பலர் நீதிமன்றங்களை நாடுவதால் நியமனங்கள் தாமதமாகிறது  என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பணிகளை, நாடே வியக்கும் வகையில் நிறைவேற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் நல்ல சூழலால் தொழில் முதலிட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இயற்கை கூட குறிப்பிட்ட காலத்தில் மழையைப் பெய்து டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தி அதிகரிக்க வழிவகையாக அமைந்துள்ளது. முதல்வரின் காலம் பொற்காலமாக அமைந்திருக்கிறது.

கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற இருக்கிறது. 7,500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கும், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்குவதற்கும், 8027 பள்ளிகளுக்கு அட்டல் டிக்கரிங் லேப் வழங்குவதற்கும் தயாராக உள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.