Header Ads

Header ADS

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் வரும் 19-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த உள்ளார்.



தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் வரும் 19-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சில மாநிலங்கள், அக்.15-ம் தேதியில் இருந்து பள்ளிகளைத் திறந்துள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றன.

இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்தார்.

எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவ.11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (அக்.19-ம் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.