நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 12( நாளை ) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, October 11, 2020

நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 12( நாளை ) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

                                   

 

நீட் தேர்வு முடிவுகள் நாளைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 14,37,000 பேர் எழுதிய நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. விடைக்குறிப்புகளை சரி பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 12ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

 

அதன்படி, நீட் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் - ஆப் விவரம் உள்ளிட்டவை இன்று மாலை அல்லது நாளைக்குள்ளாக வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ntaneet.nic.in என்ற இணையதளம் அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பார் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments: