Header Ads

Header ADS

1.6.2009 க்கு முன்னரும் 1.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்








1.6.2009 க்கு முன்னரும் 1.06.2009 க்கு பின்பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் பற்றி சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் 5 எம்.எல்.ஏக்கள் மூலம் முன்மொழியப்பட்டது.

"சம வேலைக்கு" "சம ஊதியம்"

"ஒரே பதவி" "ஒரே பணி" "ஒரே கல்வித்தகுதி" ஆனால் அடிப்படை ஊதியத்தில் 50% குறைவு. இந்த ஊதிய முரண்பாட்டை களைய கோரி மூன்று முறை மிககடுமையான உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்து அதனை நிறைவேற்ற 10 ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வருகிறது இதற்காக அமைக்கப்பட்ட திரு.சித்திக் IAS அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஊதிய குழுவும் ஜனவரி-2019 ல் முதலமைச்சரிடம் அறிக்கை அளித்தும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என நேற்று காங்கிரஸ் தலைமையிலான ஐந்து எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.





No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.