பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு - முதல்வர் ! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 10, 2020

பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு - முதல்வர் !











யுஜிசி விதிகள் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பெற்றோர்கள் மனநிலையை அறிந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறி இருப்பதாவது: அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். மேலும் அவர் கூறி இருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. வானூர் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு துவங்கப்படும் மாணவர் சேர்க்கையும் இந்தாண்டே நடத்தப்படும். ரூ.28 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றும் பணி துவங்கப்படும். நீட் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக்அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டோம். அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார் .

அரியர் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அரியர் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே யுஜிசி விதிமுறைப் படிதான் நடப்போம் என தெளிவாக கூறி விட்டோம். பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும்.கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 2013 -ல் ஆசிரியர்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.







No comments: