Header Ads

Header ADS

அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை- நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது



தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், நடப்புக் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை மந்தமாக இருந்தாலும், தற்போது சேர்க்கை அதிகரித்திருப்பதாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின் றனர்.

குறிப்பாக தனியார் பள்ளிகளில்இருந்து மாணவர்கள் பெருமளவில்அரசுப் பள்ளியை நாடி வருவதாகவும், அவ்வாறு வரும் மாணவர்க ளுக்கு தனியார் பள்ளிகள் மாற்றுச்சான்றிதழை வழங்க அலைக்கழிப்ப தாகவும் பல பெற்றோர் கூறுகின்றனர்.

 இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிக ரித்து வருகிறது.

20 விழுக்காடு சேர்க்கை அதிகரிப்பு

உதாரணமாக, கடலூர் மாவட்டத் தில் உள்ள 1,424 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 14-ம் தேதி வரை 18,718 மாணவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 38,009 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் முதல் வகுப்பில் 12,586 மாணவர்கள், 6-ம் வகுப்பில் 14,405 மாணவர்கள், 9-ம் வகுப்பில் 5,352 மாணவர்கள், பிளஸ் 1-ல் 17,264 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடும் போது இது20 விழுக்காடு அதிகம். பள்ளித் திறக்கும் பட்சத்தில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்று கடலூர் மாவட் டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை யும் விரிவாக்கம் செய்ய வேண்டும். ஊரகப் பகுதியில் கூடுதல் வகுப்ப றைகள், கழிப்பறைகள், புத்தகங்கள், ஆசிரியர்கள் என அனைத்து வகையி லும் கட்டமைப்பை அதிகரிக்க வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இட ஆக்கிரமிப்பு உள்ளது. சில இடங்களில் பள் ளியை விரிவாக்கம் செய்ய, பள்ளிக்குஅருகில் இருக்கும் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த முடியவில்லை. சிலர் அதை ஆக்கிரமித் துள்ளதால், இடையூறுகளும் ஏற் படுகின்றன.இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்என்கின்றனர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுமற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக ளின் ஆசிரியர்கள்.

 உதாரணத்திற்கு, வடலூர் புதுநகர்அரசு மேல்நிலைப்பள்ளி இடப்பற்றாக் குறையால் தவிக்கிறது. அருகில் கிராம நிர்வாக அலுவலகம் தனிக் கட்டிடத்தில் இயங்குகிறது. அதைச் சேர்ந்த கிராம உதவியாளர் பள்ளியை ஒட்டியுள்ள புறம்போக்கு இடத்தில் கொட்டகை அமைத்துள்ளார். அதனால் பள்ளி வளாகத்தை விரிவுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரியநெசலூர் அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவுப் பொருட்களை வைக்க இரு அறைகளை பயன் படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கான வகுப்பறைகள் இன்றி தவிக்கின்றனர்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில், அரசு வழங்கதிட்டமிட்டிருந்த தொலைக்காட்சி களை நீண்ட காலமாக அடைத்து வைத்திருக்கின்றனர்.

ஊரகப் பகுதி பள்ளிகளை ஒட்டி யுள்ள காலி இடங்கள் பெரும்பாலும் விளையாட்டு மைதானம், விவசாய களம், ஆடு மாடுகளை கட்டிப் போடும்இடம் என்று வேறுவேறு வகையானஆக்கிரமிப்புகளில் சிக்கியிருக் கின்றன.

இடநெருக்கடியில் தவிக்கும் எங்களுக்கு, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கூடுதல் பள்ளிக் கட்டிடங் களை கட்டித் தந்தால் நன்றாக இருக்கும்என்கின்றனர் கடலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதி பள்ளித் தலை மையாசிரியர்கள்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலாவிடம் கேட்டபோது, “இதுவரை அது போன்ற அறிக்கை ஆசிரி யர்களிடமிருந்து வரவில்லை. வந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும்என்றார். மாணவர்களுக்கான வகுப்பறைகள் இன்றி தவிக்கின்றனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.