பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது?: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, September 11, 2020

பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது?: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு









கோவை: நாடு முழுவதும் வரும் 21 முதல் பள்ளிகள் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அக்.,5 முதல் பள்ளிகளை திறப்பதற்கான சாதக, பாதகங்கள் குறித்து, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வரும் 21ம் தேதி முதல், பள்ளிகள் திறப்பது குறித்து, வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, தமிழகத்தில் பள்ளிகள் திறக்க, கமிஷனர் தலைமையில் அதிகாரிகள், வழிகாட்டி நெறிமுறைகள் தயாரித்து வருகின்றனர்.அக்., 5ம் தேதி முதல், சுழற்சி முறையில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதோடு, சி...,க்கள் தலைமையில், அந்தந்த மாவட்ட நிலை குறித்து, கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசனை நடத்த






உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி திறப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதால், ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டும் அமர வைத்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் வகுப்பு நடத்த, அட்டவணை தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதால், சமூக இடைவெளி கடைபிடிக்க முடியும். காலை, மதியம் என சுழற்சி முறையில், முக்கிய பாடங்கள், செய்முறை பகுதிகள் மட்டும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு பிரத்யேக நேர, பாட அட்டவணை தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். பெற்றோர் சம்மதத்துடன், மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.பள்ளிகளில் மாணவர்களை அமர வைத்தல், வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் உள்ளிட்ட, சில நடைமுறைகளை பின்பற்றிய பிறகே, வகுப்பு நடத்தப்படும். இதுசார்ந்த விரிவான வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்படும்' என்றனர்.

ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதால், சமூக இடைவெளி கடைபிடிக்க முடியும். காலை, மதியம் என சுழற்சி முறையில், முக்கிய பாடங்கள், செய்முறை பகுதிகள் மட்டும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிகளில் மாணவர்களை அமர வைத்தல், வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் உள்ளிட்ட, சில நடைமுறைகளை பின்பற்றிய பிறகே, வகுப்பு நடத்தப்படும். இதுசார்ந்த விரிவான வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்படும்







No comments: