மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவு -நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments
Post a Comment