பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்....
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்திய பின்னர் நாளை (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு
முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள்
உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு
தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி
வழங்கியது. கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக பாடவகுப்புகள்
நடத்தப்பட்டன.
50 சதவீத ஆசிரியர்கள் பணிக்குவர வேண்டும், இரு அணிகளாக பிரித்து
வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளி வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம்
பெற்று வர வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டுமென்பதுள்ளிட்ட
பல்வேறு விதிமுறைகள் அந்த உத்தரவில் இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள நம்பியூர் நாச்சிபாளையத்தில்
குளம் புனரமைக்கும் பணியைத்தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை.
10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் இருந்தால்
பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்
என்றுதான் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை (29-ம் தேதி)முதல்வர்
தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு
பள்ளிகளை திறப்பது தொடர்பான தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார், என்றார்.
No comments
Post a Comment