Header Ads

Header ADS

செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டிய டிப்ஸ் .....










ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் இன்று சந்திக்கும் ஒகு முக்கிய பிரச்சனையாக இருப்பது, பேட்டரி பேக்கப் தான். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியவை என்ன என்று பார்ப்போம்

செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness- அதிகமாக வைத்து பயன்படுத்துவர் அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge- சீக்கிரம் குறைவாக்கிவிடும். எனவே வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness Mode-ல் வைத்து விடுவது நல்லது.மேலும் போனின் டிஸ்ப்ளேவை 15 நொடிகளுக்கு பின் ஸ்லீப் மோடிற்கு செல்லும் படி பார்த்து கொள்ளுங்கள். இதுவும் அதிகளவு பேட்டரியை சேமிக்கும்.

உங்கள் போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது.

 மொபைல் நிறுவனங்கள் தரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதை விட, வைபை இணைய வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது.
நம் மொபைல் போனில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான செயலிகள் , நாம் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக்கொண்டே இருக்கும் எனவே தேவையற்ற செயலிகளை uninstall செய்து விடுவது நல்லது.

ஸ்மார்ட்போனில் லொகேஷன் செட்டிங்ஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால் அதிகளவு பேட்டரி பயன்படுத்தப்படும் எனவே உங்கள் போனில் செட்டிங்ஸ் மெனு சென்று லொகேஷன் செட்டிங்ஸை ஆஃப் செய்யலாம்.

செல்போனில் செட்டிங்ஸ் சென்றுனோடிபிகேசன் செட்டிங்ஸ் ஆப் செய்து வைத்து கொள்ளுங்கள்  அடிக்கடி notification வந்தால், அப்பொழுதெல்லாம் செல்போன் செயல்படும். இதனால், charge விரைவில் தீர்ந்துவிடும்.

உங்கள் போனில் சார்ஜ் குறையும்போது பேட்டரி சேவர் அல்லது லோ பேட்டரி மோட்  சேவரைப் பயன்படுத்துங்கள்

ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றை தேவையான பொழுது மட்டும் on செய்யவும்

செட்டிங்ஸ் மெனுவில் அதிக பேட்டரி மற்றும் டேட்டாவை பயன்படுத்தும் ஆப் எது என்பதை தெரிந்து அந்த ஆப்  தேவைப்படும் சமயத்தில் மட்டும் பயன் படுத்துங்கள்

முகவும் முக்கியமாக உங்கள் மொபைல் போனில் அதிகம் பேட்டரியை குறைய செய்வது லைவ் வால்பேப்பர்கள் எனவே வேண்டாம் என்றால் நீக்கி விடுங்கள்





No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.